நாட்டில் தற்போது டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இதன் பிரகாரம் பொதுமக்கள் அனைவரும் உங்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் ஆகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 வினாடிகள் என்ற சிறிதளவிலான காலம் எடுக்கும்.
ஆகவே குறித்த காலப்பகுதிக்குள் ஒவ்வொருவருக்கும் தொற்று ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய நிலையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



