மத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரி அனுமதி பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுளளதாக தகவல்வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த தீர்மானம் கொவிட் 19 தொற்று பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டே எடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வருமானவரி பாத்திர விநியோக நடவடிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 14ம் திகதி வரையிலே இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



