நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சேறுவில பிரதேசத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தினை ஐக்கிய வர்த்தக மற்றும் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நேற்றைய தினம் 13ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சேறுவில பிரதேசத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சபா அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக அனைத்து இடங்களிலும் விளம்பரம் ஒட்ட பட்டுள்ளதாகவும் ஐக்கிய வர்த்தக மற்றும் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.



