வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கமைய குறித்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப் பிரிவு உருவாக்கப்படும்.
இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும்
மேலும் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்த படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இயற்கை எருவை பயன்படுத்தும் உழவர்களின் பட்டியல்,இயற்கை விவசாயிகள் பட்டியல் என வட்டாரம் தோறும் தயாரிக்கப்படும்.
இயற்கை எருவை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ் கொடுக்கப்படும்.
மேலும் இயற்கை பிளான் திட்டத்திற்கு என ரூபாய் 33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.



