தடுப்பூசிகளை விற்பனை செய்த நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
இதற்கமைய சைனோபார்ம் தடுப்பூசிகளை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 50 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொவிட் தடுப்பூசி செலுத்தும்போது வழங்கப்படும் அட்டையை தயாரிப்பதற்காக பணம் பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மொரட்டுவ காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



