கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு.

0

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா- கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகின்றது.

சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் வீதியை அசுத்தப்படுத்தி நடமாடித்திரிவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கட்டாக்காலி மாடுகள் கடைகளிலுள்ள மரக்கறிகள் மற்றும் பழங்களையும் உண்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கிண்ணியா பிரதேச சபை மற்றும் அப்பகுதி பள்ளிவாசல்களில் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply