மேல் மாகாணத்தில் 60 வயத்திற்கு மேற்பட்டோர் தொடர்பில் வெளியான விசேட தகவல்!

0

இது வரையில் மேல் மாகாணத்தில்
எந்த வொரு தடுப்பூசிகளையும் இதுவரை பெற்றுக் கொள்ளாத 60 வயத்திற்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தடுப்பூசிகள் முதல் மூன்று தினங்களுக்கும் செலுத்த நடவடிக்கை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு தடுப்பூசியை பெறுபவர்கள் 1906 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முற் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply