அ.தி.மு.க.வின் முன்னாள் முதலமைச்சர் எஸ். பி வேலுமணியின் வீட்டினை சுற்றி வளைக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

0

அ.தி.மு.க.வின் முன்னாள் முதலமைச்சர் எஸ். பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று காலை 6 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்துக்களை சேர்த்த குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ். பி. வேலுமணி இருந்த போது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து குறித்த சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் எஸ். பி வேலுமணி இல்லத்திற்கு முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

Leave a Reply