பண்டாரவளை பஸ் தரிப்பிடத்தில் நபர் ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தால் அங்கிருந்தவர்கள் யாரும் அவரை நெருங்கவோ அல்லது உதவி செய்யவோ முன்வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1990 என்ற அவசர ஆம்புலன்ஸ் உதவியை கோரப்பட்டு குறித்த நபர் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபருக்கு அன்டியன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



