நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை முறைகளை மீறி யாழ் உடுப்பிட்டி பண்டகை பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதற்கமைய இந்த தேர் திருவிழா நிகழ்வில் பங்கேற்ற சிலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்காரணத்தினால் குறித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்,மற்றும் குருக்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள்பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.



