கல்கமுவ காவல்துறை பிரிவிற்குற்பட்ட மஹன்னேரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமையை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீடு இன்று காலை சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வீட்டிற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 வயதான தாயும், 10 வயது மகனும் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் , கொலை செய்த சந்தேக நபரின் சடலம் உட்பட மூவரின் சடலங்களும் அந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணத்தால் குறித்த நபரினால் அந்தப் பெண் மற்றும் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதன் பின்னர் அவர் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தற்போது சந்தேகிக்கின்றனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



