சமூக வலைத்தளத்தில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் 25 வயதான நபர் ஒருவரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் ர் சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை இணையதளத்தில் பதிவேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.



