ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அதிபர் சங்கத்தினருக்கு நாட்டின் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த அறிவித்தலை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 26 ஆண்களும், 16 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆர்ப்பாட்ட காரர்கள் பயன்படுத்திய 10 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.



