குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை

0

தற்போது 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியடைந்துள்ளார்.

இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியையும் வென்றுள்ளார்,

மேலும் மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் இவ்வாறு வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply