பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்ப்பில் வெளியான தகவல்!

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்ச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் பேருந்தின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு அதனை மீறி மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வைக்குமாறு காவல்துறை அதிபருக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வினால் எழுத்து மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது..

இந்நிலையில் இலங்கை பொது போக்குவரத்து சபைக்குச் சொந்தமான மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இன்று முதல் இந்த விடயம் தொடர்பில் அவதானிப்பதற்கு காவல்துறையினர் கண்காணிப்புநடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply