நாட்டில் ஏற்படுள்ள கொவிட் 19 தொற்றுப் பரவல் தொடர்பான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே இதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார்.
அத்துடன் இவ்வாறு வாரம் வாரம் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதன் மூலம் நாட்டில் இடம்பெறும் கொவிட் தொற்று தொடர்பான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை வரவேற்ற சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் தொற்று சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட இது சிறந்த முறையாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



