ஆண்கள் மாத்திரம் கலந்து கொண்ட கோவில் விழா!

0

மதுரை மாவட்டத்தில் மூன்று கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் படையல் விழா ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய குறித்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் நடைபெறும்.

இந்நிலையில் இந்த வருடத்துக்கான திருவிழா நேற்றை தினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வினை யொட்டி பொதுமக்கள் அனைவரும் சுவாமிக்கு நேர்த்திக் கடனாக வெட்டிருந்த 100 ஆடுகள் மற்றும் 600 சேவல்கள் கோவில் அருகே பலியிடப்பட்டன.

அத்துடன் இந்த நிகழ்வில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு பலியிடப்பட்ட ஆடுகள், சேவல்களை சுத்தம் செய்து பின்னர் வரிசையாக வைத்திருந்த அடுப்பில் மண்பானைகளில் சமைத்தனர்.
பின்பு அதனை கோவிலில் உள்ள சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.
மேலும் படையல் நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை அதாவது சர்க்கரை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply