இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 41,649 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,16 13 ,993ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 593 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,810 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றைய மேலும் 37,291 பூ ரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07.81 , 263 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,920 இலட்சமாக ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply