இலங்கை வந்தடையவுள்ள மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0

நாட்டிற்கு இன்று மாலை மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 728,460 தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளது.

இந்நிலையில் அஸ்ரா செனேகா முதலாவது தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சுமார் 540,000 க்கும் அதிகமானோருக்கு இரண்டாம் செலுத்துகைக்காக குறித்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னரே எஞ்சிய தடுப்பூசிகள் கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply