இந்தியாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் – அதிகரிக்கும் தொற்றாளர்கள்.

0

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் 7 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தப்புரம் மருத்துவக் கல்லூரியின் வைரலாஜி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply