விலைமதிப்பற்ற பைரவர் சிலைகளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வவுனியா – நெளுக்குளம் பிரதேசத்தில் புதயலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த சிலைகளே இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுக்கப்பட்ட குறித்த சிலைகளின் பெறுமதி தெரியாமல் 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் குறித்த சிலை விலை மதிப்பற்றது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



