சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்-ஆளுநர் லலித் யு கமகே.

0

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் சிலர் இவ்வாறான சட்டங்கள் முறையான வகையில் பயன்படுத்துவதில்லை.

அத்துடன் தோட்டப்புறங்களில் சேர்ந்த இள வயதினையுடைய சிறுவர்கள் நகர் பிரதேசங்களில் பணியாற்றுகிறார்கள்.

இது 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் சூழ்நிலை காரணத்தினால் பாடசாலைகளை விட்டு இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

Leave a Reply