சேலம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை டிராக்டரால் உழுத போது அங்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கமைய 1.5 அடி அகலத்தில் 10 அடி ஆழத்திற்கும் மேலாக குறித்த குழி நீண்டு சென்றது.
இதனையடுத்து குறித்த விவசாயி வருவாய் துறையினருக்கு இந்த சம்பவம் தொடர்பான தகவலை அறிவித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் துறையினர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 10 அடி தூரத்திற்கு தற்காலிகப் வேலி அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பள்ளம் ஏற்பட்ட பகுதி தானியக் கிடங்கு போன்று காணப்படுகின்றது.
அத்துடன் முதுமக்கள் தாழி அல்லது பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கம் போன்று அது காட்சி அளித்தது.
இதனால் வருவாய் துறையினர், தொல்லியல் துறைக்கு தகவல் அறிவித்துள்ளனர்.
தகவலறிந்து தொல்லியல் ஆய்வுக் குழுவினர் பள்ளம் ஏற்பட்ட அவர்கள் ஆய்வு செய்ததன் பின்னர் தான் திடீர் பள்ளம் ஏற்பட்டதன் காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



