பயணத் தடைகள் எப்போது முழுமையாக நீக்கப்படும்?-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அதிரடி தகவல்!

0

நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத நிறைவில் 10.5 மில்லியன் தடுப்பு ஊசிகள் இலங்கை கிடைக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

குறித்த தடுப்பூசிகளை ஏற்றினால் 80% தடுப்பூசி ஏற்றப்பட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் நாட்டை முடக்கி வைத்திருந்தது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என ஜனாதிபதி அமைச்சர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply