இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள அதிகளவான தடுப்பூசிகள்!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 437,878 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் சைனோ பார்ம் முதலாவது தடுப்பூசி 356,628 பேருக்கு செலுத்தப்பட்டது.

அத்துடன் சைனோபார்ம் இரண்டாவது தடுப்பூசி 25,240 பேருக்கு வழங்கப்பட்டது.

அவ்வாறு மொடர்னா முதலாவது தடுப்பூசி 25,240 பேருக்கு செலுத்தப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 108 பேருக்கு பைசர் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply