சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் திடீர் மரணம்!

0

சுற்றுலா விடுதியில் சில காலங்களாக தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் திடீரென மரணித்துள்ளளார்.

இதற்கமைய அளுத்கம- மொரகல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வந்த 78 வயதான நபர் ஒருவரே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சடலம் கொவிட் பரிசோதனைக்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply