பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

0

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன்.

இதற்கமைய குறித்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் வெற்றி பெற்றது.

குறித்த வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த படத்திற்கு சசி இயக்குனர் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் அன்று பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது இயக்குனர் யார் என்று அறிவிப்பு வெளியானது.

அதன்படி குறித்த படத்தை நடிகரும், இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply