போலியான முறையில் நெகட்டிவ் கொரோன சான்றுதழ் தயாரித்த நால்வருக்கு நேர்ந்த கதி!

0

கேரள மாநிலத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் செல்வாக்கு செலுத்தி வருகின்ற நிலையில் தற்போது புதிதாக ஜிகா வைரஸின் தாக்கம் உள்ளதாலும் தமிழகம் மாத்திரம் பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கு “இ” அதிபர் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்கு கொவிட் நெகட்டிவ் சான்றுகளுடன் வருபவர்களுக்கு மாத்திரமே அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் கேரள காவல்துறையினர் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு நெகட்டிவ் சான்றுகளை தமிழக அரசின் இணையதளத்தில் சரிபார்த்து அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தமபாளைய பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், முருகன் ஆகியோர் கொவிட் நெகட்டிவ் சான்றுகளுடன் கம்பம் மெட்டு வழியாக செல்ல முயன்றுள்ளனர்.

அங்கிருந்த காவல்துறையினர் குறித்த சான்றுகளை சரிபார்த்த போது அது போலியானது என தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார், பண்ணை புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கம்பம்படு காவல்துறையினரின் தலைமையில் தமிழகம் வந்த கேரள காவல்துறையினர் குறித்த நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இவ்வாறு இந்த போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி மற்றும் தொலைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply