மத்துகம பிரதேசத்தில் வீடிற்கு வந்த நண்பனை கொலை செய்த நபர் ஒருவர் கைது செயப்படுள்ளார்
இந்நிலையில் தனது 9 வயதான சிறுமி ஒருவரை துஸ்ப்பிரயோகதிற்கு உட்படுத்த முயன்ற நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய வீட்டுக்கு வந்த நண்பர் தனது 9 வயதான சிறுமி ஒருவரை துஸ்ப்பிரயோகதிற்கு உட்படுத்த முயன்றதை அவதானித்த தந்தை அந்த நண்பரை தாக்கி கொலை செய்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவமானது நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
48 வயதேயான மத்துகம நாபிட்டிவல பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் கொலைபுரிந்த அந்த சிறுமியின் தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுள்ளார்.
இவ்வாறு முன்னிலைபடுத்திய போது குறித்த சிறுமியின் தந்தை ,14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
உயிரிழந்த நபரின் உடல் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம காவல்துறைனர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



