செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0

இலங்கையில் காணப்படும் அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பத்திரிகை சபை சட்டத்தை அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் வகையில் மீண்டும் திருத்துவது குறித்து தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனை தெரிவுக்குழுவின் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தொலைக்காட்சிகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளில் மீண்டும் திருத்தங்களை செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மிக விரைவாக இது குறித்த நடவடிக்கைகள் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply