தற்போது நாட்டில் பொலித்தீன் பாவனைகள் தடை செய்யப்பட்டு வருகின்றன.
இருப்பினும் தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறியும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 20 மில்லிலீற்றர்அல்லது 20 கிராமுக்கும் குறைவான நிறையுடைய செசே பைக்கற்றுகள் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் தடை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் அவ்வாறு தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்திகளை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக அதன் பணிப்பாளர் நாயகம் பீ.பீ ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார் .
நேற்றய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கெஸ்பேவ -ஜம்புரெலியா பகுதியில் தடை செய்யப்பட்ட 3000 செசே பைக்கற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் குறித்த நிறுவனத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள செசே பைக்கற்றுகள் இருப்பின் அதனை உடனடியாக அகற்றுமாறும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.



