திடீர் சுற்றிவளைப்பு கைதான 9 நபர்கள்!

0

யாழ் – கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது

குறித்த சுற்றி வளைப்பானது அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பு தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகேயின் வழிகாட்டுதலின் கீழ் மூத்த காவல்துறை அத்தியட்சகர் மற்றும் கோப்பை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பங்களிப்புடன் இந்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு கைதானவர்களில் 22,23 மற்றும் 25 வயதுடைய மூவர் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் ஏனைய 6 நபர்களும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply