சென்னையில் இன்று முதல் மீண்டும் கோவேக்சின் 2வது டோஸ் தடுப்பூசி!

0

உலகளாவிய ரீதியில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஏனைய நகரங்களை விட அதிகளவில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கடந்த ஒரு வார காலமாக கொவிஷீல்டு தடுப்பூசி மாத்திரமே இருப்பில் இருந்ததால் பொதுமக்களுக்கு கொவிஷீல்டு தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டது.

அத்துடன் கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால் குறித்த செயற்பாடு இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.

அத்துடன் குறித்த கோவேக்சின் தடுப்பூசி மாநகராட்சியில் 45 மையங்களில் செலுத்தப்படும்.

இவ்வாறு தடுப்பூசியினை பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்களும் நேரடியாக முகாம்களுக்கு வருகை தருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அத்துடன் இன்றைய தினம் ஒவ்வொரு மையங்களிலும் கோவேக்சின்200 பேருக்கும், கோபி கொவிஷீல்டு 200 பேருக்கும் போடப்படுகின்றது.

அவ்வாறு நேற்றைய தினம் முகாம்களில் கொவிஷீல்டு 300 பேர் விதம் 13 ஆயிரத்து 500 பேருக்கும் செலுத்தப்பட்டது.

அத்துடன் இந்த தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் மையங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

இருப்பினும் தற்போது நிலவும் சூழ்நிலையில் குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுவதால் மையங்களுக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறதுதுடன் பொதுமக்கள் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply