பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்ககை!

0

பொதுமக்கள் அனைவரும் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி
எதிர்வரும் வார இறுதி நாட்களில் செய்யப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த காலங்களைப் போன்று மீளவும் குறித்த பயணத் தடையை எதிர்நோக்க வேண்டிய சந்தர்ப்பம் நிலவும் என காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் பரவல் காணப்படுகின்றதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வார இறுதி நாட்களில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply