யாழ் நாவற்குழி பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை புரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு தன்னைத் தானே சுட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை புரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ காவற்துறையினர் மற்றும் சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



