ஐந்து பைசா நாணயத்துடன் வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?

0

செலூர் பகுதியில் பாக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கடையில் ஐந்து பைசா நாணயத்துடன் வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அங்கு பிரியாணி வாங்க ஐந்து பைசா நாணயத்துடன் 500க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று திரண்டு நின்றனர்.

இதனைப் பார்த்த கடை ஊழியர்கள் அதிர்ச்சியிலும் நின்றனர்.

ஐந்து பைசா கொண்டு வரும் 50 நபர்களுக்கு பிரியாணி வழங்க முடிவு செய்திருந்த அவர்கள் அதிகமாக கூட்டம் கூடியதால் கடையின் கதவுகளை அடைத்துள்ளனர்.

அத்துடன் அங்கு வருகை தந்த அனைவரையும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மற்றும் முகக் கவசம் அணியாமல் முண்டியடித்த வண்ணம் நின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அந்தக் கடை மூடப்பட்டதால் அங்கிருந்த அனைவரையும் கலைந்து போகுமாறு காவல்துறையினர் கட்டளையிடுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க முண்டியடித்த மக்கள்

Leave a Reply