பிரதேச செயலக மட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தயாராக இருந்த 7 நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பொலன்னறுவை – தம்பால பிரதேசத்தில் அரலங்கவில விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசேட தேடுதல் பணியின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் உரிய அனுமதி பத்திரம் இருக்கவில்லை என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மாடுகளை அறுப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து 25 பால் பசுக்கள் உட்பட 68 மாடுகளை அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.
மேலும் 1000 கிலோவுக்கு அதிகமான மாட்டிறைச்சியையும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



