இலங்கை வரவுள்ள மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0

மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளே இவ்வாறு நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவிடமிருந்து தேசிய மருந்தாக கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்த பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply