18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் எவரையும் தொழிலுக்கு அமர்த்த முடியாது -அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

0

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இரு வேறு வகையான விசாரணைகளை கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது குறித்த விடயம் தொடர்ப்பில்தெரிவித்திருந்தார்.

அத்துடன்16 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியமை தொடர்பாகவும் , அவரின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளை கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மலையகத்தில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் எவரும் தொழிலுக்கு அமர்த்த கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயற்பாட்டினை மீறி தொழிலுக்கு அனுப்புவார்கள் தொடர்ப்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பகங்களை சேர்ந்த 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு ,தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக புதிய தொழில் பயிற்சி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply