முடிஅடர்த்தியாகவும் நன்றாகவும் வளர்வதற்கு எண்ணெய் தயாரிப்பது எப்படி ?

0

தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரியாக்க கூடிய ஒரு அருமையான எண்ணை தயாரிப்பது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

இந்த காலத்து பெண்கள் அனைவரும் தலைமுடிக்கு அக்கறை காட்டுவதில்லை.

இதன் காரணத்தினால் அதிகப்படியான முடி உதிரும் பிரச்சனை ஏற்படுகின்றது.

மேலும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஆரோக்கியம் பிரச்சனைகளுக்காக மேற்கொள்ளும் மாத்திரைகள் போன்ற காரணத்தினாலும் இப்பொழுது பலரும் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர்.

தலை முடிக்கு என கொஞ்சம் நேரமாவது நேரம் ஒதுக்கி பராமரிப்பதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுவதை நாம் தடுக்க முடியும்.

கூந்தலின் வளர்ச்சியையும் அதிகரிக்க முடியும்.

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது சில விடயங்களை மாத்திரம் தான் .

அதாவது தலைக்கு அதிகளவில் ஷம்பு பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தினமும் தலை குளிக்காமல் வாரத்தில் மூன்று முறை மாத்திரம் தலை குளிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
மாதத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.
மேலும் கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்த்து கொள்ளுங்கள்.
வீட்டிலேயே என்னை தயார் செய்து தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.
ஆகவே தலை முடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.

தலை முடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிப்பு.

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்-200 மில்லி
விளக்கெண்ணெய் -100 மில்லி
வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரகம் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து சூடு படுத்தவும்.
எண்ணெய் சூடு ஏறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

பின் பொடி செய்துள்ள கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை எண்ணெயில் சேர்த்துக் கிளறிவிடுங்கள் .

எண்ணெயானது லேசாக பொங்கிவரும் அதைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். அந்த நுறையானது சிறிது நேரத்திற்குள் அடங்கிவிடும். ஆகவே என்னை 3-5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து நான்கு மணி நேரம் அந்தப் பாத்திரத்தில் ஊற வைக்கவும். அப்பொழுதுதான் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்திலுள்ள எசன்ஸ் எண்ணையில் நன்கு ஊறி வரும்.

ஆகவே 4 மணி நேரம் கழித்து எண்ணெய் வடிகட்டி ஒரு சுத்தமான போத்தலில் ஊற்றி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு தினமும் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வரலாம்.

இதன் மூலம் தலைமுடி உதிர்தல் நீங்கி தலைமுடி அடர்த்தியாக வளர உதவும்.

Leave a Reply