இலங்கைக்கு சர்வதேசத்தின் அழுத்தம் வேண்டும்!

0

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் மிக பிரதானமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டம் குறித்து யாழ் ஊடக அமையத்தில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொடர்ந்து அவர் கருத்துரைக்கையில் , ‘இலங்கையைப் பொறுத்த வரை பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது ஒரு குழப்பகரமான வியாக்கியானங்களைக் கொண்ட ஒரு சட்ட ஏற்பாடாகவே காணப்படுகின்றது.

இலங்கை அரசினுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறான நிலைப்பாடுகளை கொண்டிருந்தவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகத்தான் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை பார்க்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply