மும்பையில் 5 நாட்களுக்கு கன மழை!

0

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய நேற்று முன்தினம் மும்பையில் பெய்த கன மழையினால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்த வண்ணம் காணப்பட்டது.

இவ்வாறு நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

அத்துடன் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு சாலை, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மாத்திரம் நகரில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

அத்துடன் இவ்வாறு இடைவிடாத மழையே குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக அமைந்துள்ளது.

நேற்று காலை 8.30 நிலவரம் படி கடந்த 24 மணி நேரத்தில் மும்பை புறநகரில் 23.5 செ.மீ மழையும், நகர் பகுதியில் 19.7 செ. மீ மழை வீழ்ச்சியும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை பெய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply