கலஹா பிரதேச வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கலஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட உட தெல்தொட்ட பகுதியிலிருந்து, கண்டி கலகெதர பகுதியிலுள்ள தொழிற்சாலைக்கு ஆக்களை ஏற்றிச் செல்லும் பஸ்ஸே இவ்வாறு மோதியுள்ளது.
அத்துடன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது பஸ் மோதிய பின்னர் உடனடியாக குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலஹா காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



