இலங்கையில் சடுதியாக குறைந்த சிசு பிறப்பு வீதம்!

0

இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் சிசு பிறப்பு வீதம் சடுதியாக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தகவலை இராஜாங்க அமைச்சர் சிசிர வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொவிட் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடும் இதில் தாக்கத்தை செலுத்தியதாகவும் அந்தக் காலகட்டத்தில் திருமணங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையில் ஒரு வருடத்தில் 350000 சிசு பிறப்புகள் பதிவாகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply