மண்சரிவு அபாய நிலை காரணத்தினால் உடனடியாக வெளியேற்றப்பட்ட கிராமம்!

0

கினிகத்தேனை ரங்ஜுராவ சந்த சிரிகம பிரதேசத்தில் மண்சரிவு அவதான நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் படி 12 வீடுகளைச் சேர்ந்த 13 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் சந்தசிரிகம கிராமம் கினிகத்தேனை ரங்ஜுராவ மலை உச்சியில் அமைந்துள்ளது.

மேலும் கடந்த சில தினங்களில் பெய்த கடும் மழையினால் குறித்த கிராமத்தில் பாரிய நில விரிசல்கள் மற்றும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply