முதல் முறையில் அம்மாவாக நடிக்கவுள்ள பிரபல்ய நடிகை!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் நடிகை தான் காஜல் அகர்வால்.

இவர் தனக்கு திருமணம் ஆகிய பின்பும் தொடர்சியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, இந்தியன் 2, தெலுங்கில் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.

இதுதவிர, சமீபத்தில் ரவுடி பேபி எனும் புதிய தமிழ் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிகை காஜல் அகர்வால், குறித்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அத்துடன் ரவுடி பேபியான அந்த சிறுமியையும், காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரவுடி பேபி படத்தை பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்மாவாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் முதல் படம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply