கத்தோலிக்க தேவாலயங்களின் மீது இனந் தெரியாத நபர்களினால் தாக்குதல்!

0

பிரதான மூன்று கத்தோலிக்க தேவாலயங்களின் மீது இனந் தெரியாத நபர்களினால் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த தாக்குதல் சம்பவமாது மன்னார் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களின் மீது திட்டமிட்ட வகைகளில் இன்று அதிகாலை இடம் பெற்றிருப்பதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக மூன்று சொரூபங்கள் மீது கைற்களை வீசி விசமிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் விசமிகளின் குறித்த தாக்குதல் சம்பவத்தினால் சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூடு உடைந்து சேதம் ஆகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply