நாட்டிற்கு அடுத்த வாரமளவில் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் ட்விட்டர் பாதிவொஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவரையில் மொத்தமாக சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 லட்சமாக அதிகரிக்கும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.



