நீட் தேர்வு வேண்டாம் பெரும்பாலானவர்கள் கருத்து!

0

நீட் தேர்வு தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள அமைக்கப்பட்ட நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று அதன் அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இதன் பின்னர் நீதிபதி ஏ. கே ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இதன் பிரகாரம் நீட் தேர்வு தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு திருப்திகரமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் நீட் வேண்டாம் என குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இது வாக்கெடுப்பு அல்ல. எல்லா விடயங்களையும் கரைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதல் அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்ட 165 பக்க அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.

நீட் தேர்வு ரத்தாகுமா? என்பது பற்றிய கேள்விக்கு நாம் பதிலளிக்க முடியாது.

குறித்த அறிக்கையில் உள்ள தகவல்களை அரசுதான் தெரிவிக்க வேண்டும்.

மேலும் எங்களது தனிப்பட்ட கருத்துக்கள் ஆய்வறிக்கையில் நாங்கள் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply