இலங்கையில் நேற்றைய நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் தொகையே அதிகம்!

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இலங்கையில் ஒரே நாளில் மாத்திரம் 337,445 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நேற்றைய தினம் 289,122 பேருக்கு சினோபார்ம் முதலாவது தடுப்பூசியும், 32,258 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

மேலும் 15,202 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியும்,700 பேருக்கு பைஸர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் அதிக அளவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply